Skip to content
Thevaram

ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

5.85 திருச்சிராப்பள்ளி - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசர்

5.85

திருச்சிராப்பள்ளி - திருக்குறுந்தொகை

841

மட்டு வார்குழ லாளொடு மால்விடை இட்ட மாவுகந் தேறும் இறைவனார் கட்டு நீத்தவர்க் கின்னரு ளேசெயுஞ் சிட்டர் போலுஞ் சிராப்பள்ளிச் செல்வரே.

842

அரிய யன்றலை வெட்டிவட் டாடினார் அரிய யன்றொழு தேத்தும் அரும்பொருள் பெரிய வன்சிராப் பள்ளியைப் பேணுவார் அரிய யன்றொழ அங்கிருப் பார்களே.

843

அரிச்சி ராப்பகல் ஐவரா லாட்டுண்டு சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள் திரிச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை நரிச்சி ராது நடக்கும் நடக்குமே.

844

தாயு மாயெனக் கேதலை கண்ணுமாய்ப் பேய னேனையும் ஆண்ட பெருந்தகை தேய நாதன் சிராப்பள்ளி மேவிய நாய னாரென நம்வினை நாசமே. (*) இப்பதிகத்தில் 5,6,7,8,9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - தாயுமானேசுவரர், தேவியார் - மட்டுவார்குழலம்மை.