Skip to content
Thiruvasagam & Thirukkovaiyar

எட்டாம் திருமுறை – திருவாசகம், திருக்கோவையார்

26. அதிசியப் பத்து - முத்தி இலக்கணம்

மாணிக்கவாசகர்

26. அதிசியப் பத்து - முத்தி இலக்கணம் (திருப்பெருந்துறையில் அருளியது - அறுசீர்க்கழி நெடிலுடி ஆசிரிய விருத்தம்)

428

வைப்பு மாடென்றும் மாணிக்கத் தொளியென்றும் மனத்திடை உருகாதே செப்பு நேர்முலை மடவரலியர்தங்கள் திரத்திடை நைவேனை ஒப்பிலாதான உவமணி லிறந்தன ஒண்மலர்த் திருப்பாதத்து அப்பன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.

429

நீதியாவன யாவையும் நினைக்கிலேன் நினைப்பவ ரொடுங்கூடேன் ஏதமே பிறந்திறந்துழல்வேன் என்னடி யானென்று பாதி மாதொடுங் கூடிய பரம்பரன் நிரந்தர மாய் நின்ற ஆதிஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.

430

முன்னை என்னுடை வல்வினை போயிடமுக்கண துடையெந்தை தன்னை யாவரும் அறிவதற் கரியவன் எளியவன் அடியார்க்குப் பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில் இளமதியதுவைத்த அன்னை ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.

431

பித்த னென்றெனை உலகவர் பகர்வதோர் காரணம்இதுகேளீர் ஒத்துச் சென்றுதன் திருவருட் கூடிடும் உபாயம தறியாமே செத்துப் போய்அருநரகிடை வீழ்வதற் கொருப்படு கின்றேனை அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.

432

பரவு வாரவர் பாடுசென் றணைகிலேன் பன்மலர் பறித்தேத்தேன் குரவு வார் குழலார் திறத்தே நின்றுகுடிகெடு கின்றேனை இரவு நின்றெறி யாடிய எம்மிறை எரிசடை மிளிர்கின்ற அரவன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.

433

எண்ணிலேன் திருநாமவஞ் செழுத்தும்என் ஏழைமை யதனாலே நண்ணிலேன் கலைஞானிகள் தம்மொடுநல்வினை நயவாதே மண்ணிலே பிறந்திறந்து மண்ணாவதற் கொருப்படு கின்றேனை அண்ணல் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.

434

பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை இத்தை மெய்யெனக் கருதிநின்றிடர்க் கடற் சுழித்தலைப் படுவேனை முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.

435

நீக்கி முன்னென்னைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து நுகமின்றி விளாக்கைத்துத் தூக்கி முன்செய்த பொய்யறத் துகளறுத் தெழுதரு சுடர்ச்சோதி ஆக்கி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.

436

உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம் போல் பற்றலாவ தோர் நிலையிலாப் பரம்பொருள் அகப்பொருள் பாராதே பெற்றவா பெற்ற பயனது நுகர்த்திடும் பித்தர்சொல் தெளியாமே அந்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.

437

இருள்திணிந்தெழுந்திட்டதோர் வல்வினைச் சிறுகுடிலிதுவித்தைப் பொருளெனக்களித் தருநரகத்திடை விழப்புகுகின்றேனைத் தெருளும் மும்மதில் நொடிவரை யிடிதரச் சினப்பதத் தொடுசெந்தீ அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயங் கண்டாமே.