தனி - திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
5.91 தனி - திருக்குறுந்தொகை
திருநாவுக்கரசர்
ஏயி லானையெ னிச்சை யகம்படிக் கோயி லானைக் குணப்பெருங் குன்றினை வாயி லானை மனோன்மனி யைப்பெற்ற தாயி லானைத் தழுவுமென் ஆவியே.
முன்னை ஞான முதற்றனி வித்தினைப் பின்னை ஞானப் பிறங்கு சடையனை என்னை ஞானத் திருளறுத் தாண்டவன் தன்னை ஞானத் தளையிட்டு வைப்பனே.
ஞானத் தாற்றொழு வார்சில ஞானிகள் ஞானத் தாற்றொழு வேனுனை நானலேன் ஞானத் தாற்றொழு வார்கள் தொழக்கண்டு ஞானத் தாயுனை நானுந் தொழுவனே.
புழுவுக் குங்குணம் நான்கெனக் கும்மதே புழுவுக் கிங்கெனக் குள்ளபொல் லாங்கில்லை புழுவி னுங்கடையேன்புனி தன்றமர் குழுவுக் கெவ்விடத் தேன்சென்று கூடவே.
மலையே வந்து விழினும் மனிதர்காள் நிலையி னின்று கலங்கப் பெறுதிரேல் தலைவ னாகிய ஈசன் றமர்களைக் கொலைகை யானைதான் கொன்றிடு கிற்குமே.
கற்றுக் கொள்வன வாயுள நாவுள இட்டுக் கொள்வன பூவுள நீருள கற்றைச் செஞ்சடை யானுளன் நாமுளோம் எற்றுக் கோநம னால்முனி வுண்பதே.
மனிதர் காளிங்கே வம்மொன்று சொல்லுகேன் கனிதந் தாற்கனி யுண்ணவும் வல்லிரே புனிதன் பொற்கழல் ஈசனெ னுங்கனி இனிது சாலவும் ஏசற் றவர்கட்கே.
என்னை யேதும் அறிந்திலன் எம்பிரான் தன்னை நானுமு னேது மறிந்திலேன் என்னைத் தன்னடி யானென் றறிதலுந் தன்னை நானும் பிரானென் றறிந்தெனே.
தெள்ளத் தேறித் தெளிந்துதித் திப்பதோர் உள்ளத் தேறல் அமுத ஒளிவெளி கள்ளத் தேன்கடி யேன்கவ லைக்கடல் வெள்ளத் தேனுக்கெவ் வாறு விளைந்ததே. (*) இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.