Skip to content
Periya Puranam

பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்

11.07 அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம்

சேக்கிழார்

4169

மூவேந்தர் தமிழ் வழங்கு நாட்டுக்கு அப்பால் முதல்வனார் அடிச்சார்ந்த முறைமை யோரும் நா வேய்ந்த திருத்தொண்டத் தொகையில் கூறும் நல் தொண்டர் காலத்து முன்னும் பின்னும் பூ வேய்ந்த நெடும் சடை மேல் அடம்பு தும்பை புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த சேவேந்து வெல் கொடியான் அடிச்சார்ந்தாரும் செப்பிய அப்பாலும் அடிச் சார்ந்தார் தாமே

4170

சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி செற்றார் தம் புரம் எரித்த சிலையார் செல்வத் திருமுருகன் பூண்டியினில் செல்லும் போதில் சுற்றாரும் சிலை வேடர் கவர்ந்து கொண்டதொகு நிதியின் பரப்பு எல்லாம் சுமந்து கொண்டு முற்றாத முலை உமையாள் பாகன் பூத முதல் கணமே உடன் செல்ல முடியாப் பேறு பெற்றார் தம் கழல் பரவ அடியேன் முன்னைப் பிறவியினில் செய்த தவம் பெரியவாமே