அகவல்
முதல்வன் வகுத்த மதலை மாடத்து இடவரை ஊன்றிய கடவுட் பாண்டிற் பள்ளிச் செம்புய லுள்விழு துறீஇப் புத்தேள் நிவந்த முத்த மாச்சுடர் எறிவளி எடுப்பினுஞ் சிறுநடுக் குறாநின் அடிநிழல் அளியவோ வைத்த முடிமிசை இலங்குவளைத் தனிப்போது விரித்த அலங்குகதிர் ஒலியல்நீ அணிந்ததென் மாறே.