Skip to content
Prabandha Malai

திருஆலவாய் உடையார் பாசுரம்

1.01 திரு ஆலவாய் உடையார் அருளிச் செய்த திருமுகப் பாசுரம்

திருஆலவாய் உடையார்

திரு ஆலவாய் உடையார் அருளிச் செய்த திருமுகப் பாசுரம்

1

மதிமலி புரிசை மாடக் கூடற் பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற கன்னம் பயில்பொழில் ஆல வாயில் மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம் பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க் ( 5) குரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா உகைக்குஞ் சேரலன் காண்க பண்பா லியாழ்பயில் பாண பத்திரன் தன்போல் என்பால் அன்பன் தன்பால் (10) காண்பது கருதிப் போந்தனன் மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.